புதன், 19 அக்டோபர், 2016

விரைவில் மாறப் போகிறது உங்கள் செல்பேசி எண்?

         இந்தியாவில் தற்போதுள்ள 10 இலக்க செல்பேசி எண்களை, விரைவில் 11 இலக்க எண்களாக மாற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
        இந்தியாவில் செல்பேசி சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது, 10 இலக்க எண்களைக் கொண்ட எண்ணே அறிமுகம் செய்யப்பட்டது
(அப்போதிருந்த பயனாளர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டாது என்னும் முடிவின் அடிப்படையில் இருந்திருக்கலாம். ,இந்தியர்கள் இப்படி ஆளுக்கு 4செல்பெசி ஒவ்வொன்றிலும் 4சிம் என்று வாங்கிக் குவிப்பார்கள் என்று யாரும் சொல்லலியே...!)
செல்போன் பயனர் அடிப்படையில் அப்போதைய கணிப்பின்படி இந்த 10 இலக்க எண் என்பதை அடுத்து 30 ஆண்டுகளுக்குப் பராமரிக்க முடிவும் செய்யப்பட்டது.
ஆனால், இந்தியாவில் செல்பேசி சேவையின் அசுர வளர்ச்சியும், வாடிக்கையாளர்களின் அதீத பயன்பாடும் காரணமாக, பொருளாதார நிபுணர்களின் கணிப்பையும் மீறி செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதோடு, ஒருவரே பல எண்களைப் பயன்படுத்தும் நிலையும் ஏற்பட்டது
(அதனால், இரண்டு சிம் வைத்திருக்கும் ஒரே மனைவியின் எண்களை மனைவி-1, மனைவி-2 என்று போட்டுவைத்திருக்கும் நம் கணவன்மார்களை என்ன செய்ய ?)
இதனால், செல்போன் நிறுவனங்களுக்கு 10 இலக்க எண்களை அளிப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாக உள்ளது. இந்த சிக்கலுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செல்போன் எண்களை 11 இலக்கங்கள் கொண்டதாக மாற்ற தொலைத் தொடர்புத் துறை முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
(இதனால் குழப்பம் ஏற்படாமலிருக்க, தற்போதிருக்கும் எண்களின் முன்னோ / பின்னோ ஒரு சுழியத்தை (0) மட்டும் போட்டு, சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, புதிய எண்களுக்கு மட்டும் 11இலக்க எண்களைத் தரலாம்… அரசாங்கத்தார் என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ? அந்த சுழியத்துக்கே வெளிச்சம்! -நா.மு.)
அடைப்புக்குறிக்குள் நீல வண்ண எழுத்தில் இருப்பவை மட்டும் நம் கருத்துகள். மற்றவை அப்படியே வந்த செய்திகள்
தகவலுக்கு நன்றி – பாடசாலை இணையம்-

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

பிளாஸ்டிக் அரிசி! சீனப் பட்டாசு! செய்திகளின் பின்னணி என்ன?


பிளாஸ்டிக் அரிசியா?
என்ன? கேட்டவுடன் பகீரென்கிறதா?
எனக்கும் 
அப்படித்தான் இருந்தது. 

பிளாஸ்டிக் அரிசியை சாப்பிடுவதால் எவ்வளவு ஆபத்துகள் நிகழும்!?

இதைப் பாருங்கள்-

இது உண்மையாக இருக்குமானால் உடனடியாக இதனைத்
தடுக்க வேண்டுமல்லவா?

சனி, 15 அக்டோபர், 2016

சன் டி.வி., விஜய் டி.வி.யை சரித்திரம் மன்னிக்காது!

கலர் டிரஸ் போட்டுக் கலக்கும்
கவர்ச்சிப் பேய்!
     (எப்புடீ?)

 படிப்பவர்களை 
வெறும் பார்ப்பவர்களாக மாற்றியது 
தொலைக்காட்சி!
அது குழந்தைளைப் பாதிப்பதைப் பற்றி 
விளக்க வேண்டியதில்லை.

வியாழன், 13 அக்டோபர், 2016

“ரெமோ” -சிவ.கார்த்தியின் அவகீர்த்தி!


வருத்தப் படாத வாலிபக் கதையின்
      வணிகம் தொடரும் அநீதி இது
திருத்தப் படாத சிவ.கார்த்தி பாணி
      தெரிந்தே படரும் வியாதி இது!

சனி, 8 அக்டோபர், 2016

“புதிய கல்விக்கொள்கை-2016” எதிர்க்க வேண்டிய அவசியமென்ன?


“வரைவு தேசியக் கல்விக்கொள்கை–2016 சிலஉள்ளீடுகள்” எனும் அறிக்கை http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/nep/tamil.pdf  மத்தியஅரசால் வெளியிடப் பட்டுள்ளது. இந்தப் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. (தமிழில் 99பக்கம்) இதில் உள்ள பல அம்சங்கள், இன்றைய கல்வியின் மோசமான தன்மைகளை உரத்த குரலில் முழங்கினாலும், இதில் மாற்றம் செய்வதற்கான செயல்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை! மாறாக, வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு அம்சங்களே இந்த வரைவுத் திட்டத்தின் பிற்பகுதியில் விரிவாக உள்ளன! அவை ஆபத்தானவை மட்டுமல்ல! இந்திய முன்னேற்றத்திற்கு எதிரானவை! இதனை எதிர்க்கவும் இவ்வரைவை மாற்றவும்  அவசியமுள்ளது. அவை என்னென்ன என்று பார்ப்போம்

திங்கள், 3 அக்டோபர், 2016

எனது ”முதல்மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” நூலின் இரண்டாம் பதிப்புமுதல்பதிப்புப் படிக்காதவர்களுக்காக, நூலில் இடம்பெற்ற கட்டுரைகளின் தலைப்புகள் – (வெளிவந்த விவரம்)


(1)  ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? (கீற்று)

(2)  கல்வி புகட்டுவது சரியா? ( எனது வலைப் பக்கக் கட்டுரை)

(3)  சமச்சீர்க் கல்வி அரசும் ஆசிரியர்களும் (ஜனசக்தி நாளிதழ்)

(4)  சமச்சீர்க் கல்வி -வாராது போல்வந்த மாமணி (ஜனசக்தி)

(5)  விண்ணப்பித்து வாங்குவதா விருது? (தினமணி நாளிதழ்)

(6)  முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே! (தினமணி இணையம்)

(7)  தனியார் பள்ளிகள் சாதனை! பின்னணி என்ன?(வலைப் பக்கம்)

(8)  தமிழ்ப்பாட நூல்களில் தமிழ் (தீக்கதிர் செம்மொழி மாநாட்டு மலர்)

(9)  கல்வியில் ஜனநாயகம், மறுமதிப்பீடு தேவை (தினமணி)

(10)     தமிழாசிரியர் செய்யும் தமிழ்நடைப் பிழைகள்(வலை)

(11)     9,11ஆம் வகுப்புகள் தேவையில்லையா? (சிந்தனையாளன் மலர்)

(12)     தமிழில் அதிகத் தோல்விக்குக் காரணம் என்ன? (வலை)

(13)     பழங்கதைகள் மறுவாசிப்பு அவசியம் (வலை)

(14)     எனது ஆசிரியப் பணியில் சில நல்ல நாள்கள் (வலை)

(15)     எனக்கு என் மாணவன் தந்த நல்ல ஆசிரியர் விருது (வலை)

(16)     பாடத்திட்டத்தில் ஊடகம் (தினமணி)

(17)     தமிழ்வழிக் கல்வியில் இருமுனைத் தவறுகள் (என் மகள் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)

(18)     தமிழ்வழிக் கல்விக்குத் தடையென்ன? (என் மகன் திருமணத்திற்கு வந்தோர்க்குத் தரப்பட்ட சிறுநூல்)
-------------------------------------------------------------------------------- 

இரண்டாம் பதிப்பின் பின்னுரையாக என்னுரை -
எனது நூல் தந்த மகிழ்ச்சியும், கவலையும்!

வியாழன், 29 செப்டம்பர், 2016

வகுப்பறையில் ஆசிரியர் குத்திக் கொலை ! என்று தணியும் இந்தக் கொலைவெறி?


புதுடெல்லி நங்லாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், இந்தி ஆசிரியர் முகேஷ் குமார்

28-9-16 மாலை 5 மணியவில் வகுப்பறையில் தேர்வு நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர் தன்னை ஏன் தேர்வு எழுத விடவில்லை என்று ஆசிரியர் முகேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போதிய வருகை பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதியில்லை என்றார் ஆசிரியர்

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர், நண்பனுக்கு ஆதரவாக மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென ஆசிரியரைக் குத்தினார். அதைத்தொடர்ந்து வாக்குவாதம் செய்த மாணவரும் ஆசிரியரை கத்தியால் குத்தினார். சகமாணவர்கள் முன்னிலையில் தொடர்ந்து 3 முறை ஆசிரியரை சரமாரியாக குத்திய மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே மற்ற வகுப்பு ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் முகேஷ் குமாரை உடனடியாக பள்ளி அருகேயுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் முகேஷ் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆசிரியரை கத்தியால் குத்திய 2 மாணவர்களையும் போலீசார் சில மணி நேரத்திலேயே கைது செய்தனர். இறந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆசிரியர் கொலைச் செய்திகளும், மாணவர் கைதுச் செய்திகளும் ஏற்கெனவே 20102இல் சென்னையில் நடந்த “ஆசிரியர் உமா மகேஸ்வரி கொலை, ஒன்பதாம் வகுப்பு மாணவர் இர்ஃபான் கைது” என்னும் செய்தியின் மறுபதிப்புத் தான்!
தமிழக அரசோ, டெல்லி அரசோ, மத்திய அரசோ கூட இதுபற்றிச் சிந்தித்து, இந்தக் கேடுகெட்ட தேர்வுமுறையை, கல்விமுறையை மாற்றாத வரை ஆசிரியர்கள் கொலை வழக்கமான செய்தியாகவே பார்க்கப்படும்! 
-----------------------------------------------------
இதன் மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும்!

ஆசிரியரால் மாணவர் தற்கொலை!

ஆசிரியர் பாலியல் கொடுமையால் மாணவி தற்கொலை!

Google+ Followers

Related Posts Plugin for WordPress, Blogger...