இன்றைய தமிழில் பெண்கவிகள்

                                 (தமிழகத்து ஔவை முதல் ஈழத்து அவ்வை வரை)

கவிஞர் இளம்பிறை

கவிதை எழுதும் ஆண்பெண் இருவரையும் குறிக்க, 'கவிஞர்' என்னும் பொதுவான ஒரு சொல் இருக்கும் போது, 'பெண்கவி' என்று தனியாகக் குறிக்க வேண்டுமா?' என்று நினைக்கலாம். 'எல்லாமே ஆண்களுக்காக' என்றாகிப்போன உலகில், 'பெண்'எனும் அடையாளத்தை, தற்காலிகமாகச் சேர்த்தே எழுதவேண்டியுள்ளது. எல்லாம் பொது என்றாகும் ஒரு பொற்காலம் வரும் வரை, தற்காலிகமான இந்தத் தனிஅடையாளம் தவறல்ல 


கவிஞர் குட்டிரேவதி

நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். இவர்களில், அதிகமான(59)பாடல்களை எழுதியவர் ஔவையார் என்பதில் ஒன்றும் பெருமையில்லை,  ஔவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான் வியப்பும் மகிழ்ச்சியும் ஊட்டுவதாகும்.அவர் எழுதிய புறநானூறு மட்டுமே 33! அவரே, அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நிகழவிருந்த போரைத் தடுத்து நிறுத்துகின்ற அளவுக்கு சொல்வாக்கும், செல்வாக்கும் மிகுந்தவராய் இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதே. அந்த அளவுக்கு வெளிப்படையான அரசியல் ஈடுபாடு கொண்டிருந்த பிற்காலப் பெண் 'புலவர்'கள் யாரையும் காணமுடியவில்லை.

       பக்தியிலும், காதலிலும் அழியாப்புகழ்பெற்ற பெண்கள் தமிழிலும் உண்டு. ஆயினும், அரசியலில் சனநாயகம் மலர்வதும், அரசியலில் பெண்கள் ஈடுபடுவதும் ஒன்றுக்கொன்று தொடர்பு --டையதாக இருப்பதால், இவை ஒன்றைஒன்று வளர்த்தெடுத்து இருபதாம் நூற்றாண்டில்தான் இரண்டுமே வளரமுடிந்தது.
       ஔவையாரும் சரி, அதற்குப்பின் வந்த பெண்புலவர்களும் சரிபெண்களுக்காகப் பாடியதில் முற்போக்குக் கருத்துக்கள் மிகவும் குறைவே. இன்னும் சொன்னால் – இருபத்தோராம் நூற்றாண்டுவரையிலும் - ஆண்புலவர்கள் பாடிய அளவுக்குக் கூட பெண்கள் பெண்ணுரிமைக் கருத்துகளைப் பாடிவிடவில்லை
 "தையல்சொல் கேளேல்" என்றவர் ஔவை! நல்லவேளையாக அந்தத் தையலின் அந்தச் சொல்லைமட்டும் கேளாமல், அதற்கு மாறாக "தையலை உயர்வு செய்" என்றவன் பாரதி!. ஆயினும், பல பத்து நூற்றாண்டாகப் படைக்கப்பட்டுவரும் இலக்கியங்களைப்   படைத்தவர்கள் பெரும்பாலும் ஆண்களே என்பதால், மனிதசமூகத்திற்குச் சொல்வதாக அமைந்த பொதுவான நியாயங்கள் (Common justice to common gender) கூட பெரும்பாலும் ஆண்களுக்கான நியாயங்களாகவே இருந்ததில் வியப்பில்லை இதற்கு வள்ளுவரும் விதிவிலக்கல்ல!

எனது கவிதைத் தொகுப்புக்கு, காலஞ்சென்ற கவிஞர் கந்தர்வன் அவர்கள் எழுதிய அணிந்துரையும் எனது முன்னுரையும்.















வானம்பாடிக் கவிஞர் மீரா அவர்களின் 
“அன்னம்“ வெளியீடாக  வெளிவந்த எனது 
“புதிய மரபுகள்“ கவிதை நூலிலிருந்து...
நா. முத்துநிலவன்
----------------------------------------------------------------------

அணிந்துரை - கந்தர்வன்

புதுமை மிகவும் தற்காலிகமானது. அடுத்து வரும் இன்னொரு புதுமை,  முன்னைப் புதுமையை அலட்சியமாகப் பழசாக்கும். பொருள்கள், கலை, இலக்கியம் இவை தாண்டி, மனிதர்களுக்குப் பிராயங்களும் பழசாகி விடுகிறது. இளமைப் பிராயம், பாலப் பிராயத்தையும், முதுமைப் பிராயம் இளமைப் பிராயத்தையும் இப்படித் தான் ஈவிரக்கமற்றுப் பழசாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆனால் உண்மையில் பிராயம் என்பது மடிவதில்லை. அது இன்னொருவனிடத்தில் எப்போதும் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது. பால்யம், இளமை, முதுமை என்ற பிராயங்கள் அன்று முதல் இன்று வரை பொதுவில் ஒன்று எனினும் எல்லாக் காலங்களிலும் அவை ஒரே மாதிரி நடந்து கொண்டதில்லை.
இன்னொரு ஆளும் நுழைகிற மாதிரி ஏன் இப்போது இளைஞன் பனியன் அணிகிறான்? அளவான பனியன் அவனுக்கு அலுத்து விட்டது. ஒரு காலத்தின் அளவுஅடுத்தடுத்த காலத்திற்கு ஓவ்வுவதில்லை.

எங்க ஊருக்கு வயசு 10,000 தெரியுமா?

இது தென்புறம் இருக்கும் ஓவியப்பாறை.
பின்பக்கம் போய் முன்பக்கமாகச் சாய்ந்து ஆய்வு செய்பவர்
முனைவர் நா.அருள்முருகன்  அவர்கள் எங்கள் CEO
கடந்த கால வரலாற்றை  அறியாதவர்கள்,
மீண்டும் அதில் வாழ சபிக்கப்படுவாரகள் என்பது எங்கோ நான் படித்தது நினைவில் இருக்கிறது.

நம் நாட்டு வரலாற்றில் ஒரு புதிய கண்டுபிடிப்பு...
அதுவும் நம் ஊரிலேயே என்றால் யாருக்குத்தான் ஆர்வம் வராது...?

அப்படி எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பொறுப்பேற்றது முதல் முனைவர் திரு அருள்முருகன் அவர்கள், மாவட்டம் முழுவதும் இருக்கும் பழமையான கோவில்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களைப் பார்ப்பதில் ஆர்வம் காட்டினார்கள்...

சரி எல்லா அலுவலர்களையும் போல கோவில்களைப் பார்க்க விரும்புகிறாரோ என்று நான் இதில் முதலில் ஆர்வம் காட்டவில்லை...

பிறகுதான்,
இவர் சாமிகளைப் பார்க்க ஆர்வம் காட்டவில்லை - நமது 
சரித்திரத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார் 
என்று புரிந்து அவர்மேல் எனக்கும் ஆர்வம் பிறந்தது..

இப்படித்தான், கடந்த தீபாவளி அன்றைக்கு முதல் நாளும், தீபாவளி அன்றும் அடுத்த நாளும் என்னையும், மகா.சுந்தர், கும.திருப்பதி, மணிகண்டன் ஆகிய நண்பர்களையும் அழைத்துக் கொண்டு திருமயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் பழங்காலச் சுவடுகள் உள்ள காடு, மலை, புதர், குன்றுகளில் திரிந்து -மதியச் சாப்பாட்டுக்கும் வராமல், வெறும் டீ பன்னுடன் முடித்து- மாலையில் வீடு திரும்பியது தனிக்கதை...

அதற்கு நல்ல பலன் - இதோ எங்கள் மாவட்டப் பழைய வரலாற்றை சற்றேறக்குறைய 3,000 முதல்10,000 ஆண்டுகள் முன்னே கொண்டு போகும் சான்று- ஓவியங்களைக் கண்டு சொல்லியிருக்கிறார் எங்கள் முதன்மைக் கல்வி அலுவலரும், நல்ல தமிழறிஞருமான முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.

வடபுறம் உள்ள ஓவியப்பாறையின் தெற்குப் பக்கமாக உள்ள ஓவியங்களில் ஒன்று            வேட்டைக்குப் பின் -தொல்காப்பியம் சொல்லும் “உண்டாட்டு” நிகழ்வாக இருக்கலாம்              கண்டவர் - முனைவர் நா.அருள்முருகன் CEO
பார்க்க இணைப்பு -
அவரது வலைப்பக்கம்      
நண்பர்கள் தொடர்வோர் பட்டியலில் இணைந்து,
அவரது நல்ல தமிழ் ஆய்வுகளைத் தொடர்க...

திருமயத்தில் தொல்பழங்காலப் பாறை ஓவியங்கள். மேலும் சிலவற்றை
இணைப்பில் சென்று பார்க்க -http://nadainamathu.blogspot.in/2013/11/blog-post_24

நன்றி -
இச்செய்திகளை விரிவாக வண்ணப்படங்களுடன்  23-11-2013 அன்று வெளியிட்ட தி இந்து ஆங்கிலம், இந்து-தமிழ், தினமலர், தினத்தந்தி, தினமணி,தினகரன், மற்றும்  24-11-2013தீக்கதிர் ஆகிய நாளிதழ்களுக்கு நன்றி

ஓர் இலக்கியச் சந்திப்பும் - என் கிளாரா டீச்சர் நினைவுகளும்

         கடந்த 17-11-2013 காலை புதுக்கோட்டையில், ஆக்ஸ்ஃபோர்டு சமையல் கல்லூரியில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியில், இரண்டு சிறுமியர் தாம் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசியபோது  எனது சிறுவயதுப் படிப்பு வாசம் அவர்களிடம் இருப்பதை மகிழ்ச்சியோடு நினைத்தேன்....

நான் அதிராம் பட்டினம் காதிர்முகைதீன் நடுநிலைப்பள்ளியில் 3-5ஆம் வகுப்புப் படித்தபோது, அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே நூலக வாசிப்புப் பழக்கம் யார்வழியாக எனக்கு அறிமுகமானதென்று இப்போது நினைவில்லை. அந்த வயதில் நூலகத்தில் உறுப்பினராக முடியாது என்று நூலகர் சொல்ல, எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரை அழைத்துக்கொண்டு போய் சிபாரிசு பண்ணச் சொல்லி, -ஏதோ ஒரு பொய்சொல்லி- உறுப்பினரானது மட்டும் நினைவில் இருக்கிறது.
அத்தோடு, ஒரு ஞாயிற்றுக் கிழமை, காலையில் நூலகம்போய் மதியம் என்னை உள்ளே வைத்துப் பூட்டிக்கொண்டு போகச் சொல்லி அந்த வாட்ச்மேன் அய்யாவைக் கேட்க, அவர் பயந்துபோய் அப்படியெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்ல, தொடர்ந்து நூலகம் வரக்கூடியவன், நிறையப் படிக்கக் கூடியவன் என்று அந்த நூலகரையே சொல்லச்சொல்லி, ஒரு வழியாக ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த நூலகத்தில் இருந்துகொண்டு காலை10 முதல் இரவு 8மணிவரை தொடர்ந்து படித்ததை இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது. அப்படி, அந்த நூலகத்தில் இருந்த தெனாலிராமன் (மரியாதை ராமன்) கதைகள், சிநதுபாத் கடல்பயணங்கள், பீர்பால் கதைகள் முதலான குழந்தைக் கதைப்புத்தகங்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டேன்.
(பிறகு என் பள்ளிவிடுமுறை நாட்களில் எல்லாம் உறவினர் வீடுகளுக்குப் போன ஊர்களான அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், நூலகங்கள் மற்றும் திருவோணத்தில் 10,11ஆம் வகுப்புப் படித்தபோது ஊரணிபுரம் அருகில் உள்ள கல்லாக்கோட்டை கிளை நூலகங்களில் படித்த புத்தகங்கள் அடடா! அறந்தாங்கி கிளைநூலகத்தில் 1970இல், நான்எடுத்த குறிப்புகள் இப்போதும் என்னிடம் இருக்கிறது பிறகு, திருவையாற்று அரசர் கல்லூரியில் படித்தபோது, முதல்வர் முனைவர் சு.சண்முகானந்தம் என்ற பாரதிப்பித்தன் அவர்களின் வீட்டில் படித்தபோது எடுத்த சி.சு.செல்லப்பாவின் “எழுத்துஇதழ்ப்படைப்புகளின் பெரும்பாலான குறிப்புகள்... பெரிய கருவூலம்போல அதைஎடுத்துப் பார்ப்பதில் இப்போதும் ஒரு மகிழ்ச்சி!
9,10ஆம் வகுப்பை மட்டும் மீண்டும் அதிராம் பட்டினத்தில் படித்த போது, எனது கணித ஆசிரியர் திரு பத்மநாபன் சார் வகுப்பிலேயே “யவனராணி“ நாவலைப் படிக்க அனுமதி தந்ததும், பிறகு அவர் வீட்டிற்குப் போய் அவர் வைத்திருந்த “பொன்னியின் செல்வனை“ வீட்டுக்கு எடுத்துவந்து அரையாண்டு விடுமுறைக்குள் ஐந்து பாகங்களையும் படித்து முடித்ததும்... சார் நீங்க இப்ப எங்கசார் இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா சார்?)
பிறகு திருவையாறு அரசர் தமிழ்க்கல்லூரியில் படித்தபோது, அங்கு திருமானூர்ச் சாலையிலிருந்த கிளைநூலகம், கல்லூரி நூலகம், மற்றும் தஞ்சாவூரில் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பெரியகோவில் போகும் வழியில் இருந்த பெரிய நூலகம்... இதெல்லாம்தான் என் “புனித யாத்திரைதலங்கள்!
இப்போது மீண்டும் அதிராம் பட்டினத்திற்கு வருவோம்- 

பாவலர் ஓம் முத்துமாரி காலமானார்

பிரபலமான கிழவி வேடத்தில்
பாவலர் ஓம்முத்துமாரி
“என்னம்மா தேவி ஜக்கம்மா - உலகம் தலைகீழாத் தொங்குதே ஞாயமா? - இப்ப
சின்னஞ்சிறுசெல்லாம்
சிகிரெட்டுப் புடிக்குது
சித்தப்பன் மார்கிட்ட தீப்பெட்டி கேக்குது! - என்னம்மா தேவி ஜக்கம்மா”
என்னும் கிராமியப் பாடல் எங்கேயாவது உங்கள் காதுகளில் விழுந்திருக்கலாம். பலரையும் கவனிக்க வைத்த பாடல் அது.

தமிழகத்துக் கிராமியக் கலையன்பர்கள் எல்லாம் பாவலர் ஓம் முத்துமாரி என்று மிகுந்த அன்போடும் மரியாதையோடும் அழைத்த அந்தக் கிராமத்துக் குயில் இன்று நம்மை விட்டுப் பறந்து போய்விட்டது. அவருக்கு நமது வீரவணக்கம்!

80வயதுக்கும் மேலாகிவிட்ட அவர் இறுதிவரை தன்குழுவினரோடும் கரகரக் குரலோடும் தமிழ்நாட்டின் ஏராளமான பல்லாயிரக்கணக்கான மேடைகளில் எல்லாம் முழங்கியவர். கலைஇரவு நிகழ்ச்சிகள் அவரால் களைகட்டிவிடும்!

நெல்லை கரிசல்குயில் கி்ருஷ்ணசாமி பாடிய எனது இசைப்பாடல்


எந்தையும் தாயும்... (இசைப்பாடல்) - நா.முத்துநிலவன்


பண்டைப் புகழும் பாரம் பரியப்
                பண்புகள் மிக்கதும் இந்நாடே! – அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
                மண்டை உடைவதும் இந்நாடே!

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
                ஏளனம் செய்வதும் இந்நாடே! - வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
                சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
                வளம் கொழிப்பதும் இந்நாடே!-தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
                பரம்பரை யாவதும் இந்நாடே! 

வேலைப் பளுவால் மாதச் சம்பளர்
                வெந்து கிடப்பதும் இந்நாடே!-பட்ட
நூலைப் பிடித்தவர் வேலைக்கலைந்துயிர்
                நொந்து கிடப்பதும் இந்நாடே!

அங்கே வெள்ளமும் இங்கே வறட்சியும்
                அவதிப் படுவதும் இந்நாடே!-தினம்
கங்கா காவிரித் திட்டம் பற்றிய
                காலட் சேபமும் இந்நாடே!

கவிஞர் மு.கீதாவின் கவிதைத் தொகுப்புக்கு எனது அணிந்துரை

         நேர்மையான கவிதைகள் 

 அணிந்துரைநா.முத்துநிலவன்
மகளாய், மனைவியாய்,  தாயாய்,  ஆசிரியராய்,  இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படும் கோடிக்கணக்கான இந்தியப் பெண்களில் தானும் ஒருவராய், சமூக உணர்வுள்ள சிறந்த மனிதருள் ஒருவராய்,  தன் சுயஅனுபவங்களையே, கொஞ்சமாய்க் கற்பனை கலந்து(?) நெஞ்சைச் சுடும் கூர்மையான வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் போட்டு, நேர்மையான கவிதைகளாய்த் தந்திருக்கிறார் கீதா.
இதற்காகவே இவரது படைப்புகளை
வரவேற்க வேண்டும்.   

ஏனெனில்,  நான் ஏற்கெனவே மும்பைக் கவிஞர் புதிய மாதவியின் ோராம் கவிதைத் தொகுப்பிற்குத் தந்த முன்னுரையில் சொன்னதுபோல, “எழுதும் பெண்கள் நம் சமூகத்தில் குறைவு. அதிலும் சமூக உணர்வோடு எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. அதிலும் அரசியலை-பெண்ணியக் கருத்துகளைச் சரியாகப் பாடுவோர் மிகமிகவும் குறைவு. இந்த மிகமிகவும் குறைவான எண்ணிக்கையில் கீதா இடம் பெற்றிருப்பதே முதலில் பாராட்டுக்கு உரியது தானே? 

கல்கியில் வெளிவந்து, எம்ஏ தமிழ் வகுப்புக்குப் பாடநூலான எனது கவிதை



ஜெயஹே!
ஜெயஹே!
ஜெய ஜெய ஜெய ஜெயஹே!





எதிரிகளை வணங்கி            
கிருஷ்ணனைக் குறிபார்க்கும்
அர்ச்சுனர்கள்.

துச்சாதனன் பதற
பாஞ்சாலியை உரிக்கும்
பாண்டவர்கள்

கோவலனை எதிர்த்து
பாண்டியனிடம் நீதிகேட்கும்
கண்ணகியர்.

கலைஞர் தொலைக்காட்சியில் எங்கள் பட்டிமன்றம் பார்க்க...









திரைப்படங்களில் 
சிறந்தகருத்துகளை 
சொல்வதற்குத் தேவை- 
சிரிப்பா? சிந்தனையா?
நடுவர் – 
நகைச்சுவைத் தென்றல் திண்டுக்கல் ஐ.லியோனி

பேச்சாளர்கள் –
சிந்தனையே
புதுக்கோட்டை முத்துநிலவன்
கவிஞர் இனியவன்

சிரிப்பே – 
மதுக்கூர் இராமலிங்கம், 
பேரா.விஜயகுமார்.

------------- நன்றி – கலைஞர் தொலைக்காட்சி

கேட்டும் பார்த்தும் மகிழ -

“அழமாட்டேன்" என்று அழவைத்த கமல்!

 கமல் விழா –விஜய் தொலைக்காட்சி 10-11-2013 நிகழ்ச்சி
    
                                                          இந்தச் சின்ன விதைதான்

                                           இப்படி ஆலமரமானது-55ஆண்டுகளில்...

இன்று(10-11-2013)  பிற்பகலில் எதார்த்தமாக விஜய் தொலைக்காட்சியை வைக்க கமலின் பாராட்டுவிழா ஓடிக்கொண்டிருந்தது. நிறைவாக வந்து அவரே ஏற்புரையில் சொன்னதுபோல ஒரு மனிதரைப்பற்றிய நிகழ்ச்சியை எவ்வளவு நேரம் பார்க்க முடியும் என்னும சந்தேகத்துடன்தான் நானும் பார்க்க உட்கார்ந்தேன்.
ஆனால், வெங்கடேஷ், மோகன்லால், மம்முட்டி, ரஜினி, இளையராஜா எனத் தென்னகத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் மேடையிலும், சங்கர் உள்ளிட்ட கலையுலக பிரம்மாக்கள் எதிரிலும் இருக்க, கூடியிருந்த தமிழ்ரசிகர்கள் எல்லாம் திகட்டத் திகட்ட கமலைப் பற்றிப் பேசியும் சலிக்கவே இல்லை.
ஏனென்றால் பேசியவர்கள் எல்லாம் கமலைப் புகழ்ந்து பேசவில்லை.
அவரைத் சகோதரர் என்றார் –பொதுநிகழ்ச்சிகளுக்கு வராத- இளையராஜா. 
தம்மைவிட வயதுகுறைந்தவர் என்று தெரிந்தும் “அண்ணா“ என்றார் ரஜினி.
பிரபுதேவா தன் தந்தை சுந்தரம்மாஸ்டருடன் சேர்ந்து கமல் படப்பாடல்களுக்கு நடனமாடி, தனக்குத் தெரிந்த நடனத்தால் நன்றிசொல்லி நெகிழ வைத்தார்.
இவர்கள் தம் அன்பின் காரணமாகவே என்னைப் புகழ்ந்தார்கள். ரஜினி தன்னைத் தாழ்த்திக்கொண்டு என்னைப் புகழ்ந்தார் எவன் சொல்வான் இப்படி? நான் அழக்கூடாது என்னும் முடிவோடு இங்கேநிற்கிறேன் ஆனால் முடியுமா என்று தெரியவில்லை
என்று கூறிய கமல்.... 

முதல்பரிசு பெற்ற அ.மாதவையா பாடலும், இரண்டாம்பரிசு பெற்ற பாரதியார் பாடலும்.

நாட்டுப்பற்று பற்றிய பாடல் போட்டி ஒன்றில் மாதவையாவும் பாரதியாரும் போட்டியிட்டனர். அதில் முதலிடம் (ரானடே பரிசு) மாதவையா எழுதிய 51 பத்தி கொண்ட கும்மிப்பாட்டிற்குக் கிடைத்தது.16 இந்தியக்கும்மி என்னும் தலைப்பிட்ட இந்தப் படைப்பு முதலில் பொதுதர்மசத்கீத மஞ்சரியில் 1914 ஜூன் மாதம் வெளியானது. பின்னர் தேசிய கீதங்கள் என்ற தலைப்பில் 1925இல் வந்த தொகுப்பிலும் இடம்பெற்றது. இதில் பரிசு பெற்ற கும்மிப்பாட்டு முதலில் மஞ்சரி தொகுப்பில் வந்தது என்றும் அது ரானடே பரிசுபெற்றது என்ற குறிப்பும் இருந்தது.

நர்சரிப் பூக்கள்

















பஞ்சுகள்-
பாவப் பிஞ்சுகளா இவை?
ஏட்டுப் புத்தக
நெருஞ்சிகளைச் சுமக்கும்
குறிஞ்சிகள்!?!

முதுகில்
புத்தகப் பொதிமூட்டைகள்,
அப்புறம் ஏன்
இந்தக் கவரிமான் குட்டிகள்
கழுதைகள் ஆகாது?

அஜித்தின் “ஆரம்பம்” திரைப்படக் கதை தரும் அதிர்ச்சிகள்!



“இந்தப்படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே …யாரையும் குறிப்பிடுபவை அல்ல”
என்ற எச்சரிக்கையோடு தொடங்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில், யாரையோ குறிப்பிட்டபடியே வெளிவருகின்றன. நடிகர் அஜித் குமார் நடித்து, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் “ஆரம்பம்” அப்படியொரு படம்தான்.
தீபாவளிக்கு 2 நாட்கள் முன்னமே வெளியாகிவிட்டதால் நிச்சயம் ரூ.100 கோடி வசூலைத் தாண்டிவிடும் என ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்கிறார்கள். இந்தப் படத்தின் திரை மொழி, இசை, காட்சிகள் என நுணுக்கமான ஆய்வுகளை பல விமர்சகர்களும் செய்யக் கூடும். அவற்றையெல்லாம் காத்திருந்து பார்ப்போம். இப்போது, கதையில் நகலெடுக்கப்பட்டுள்ள உண்மைகளைப் பேசுவோம்.

இறந்தும் உணர்வூட்டும் இவரைத் தெரியுமா?


உயிரோடு இருந்தவரை, சாதாரண மக்களுக்கு 
இவரைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது இவர் இறந்துவிட்டார்...
இந்தியப் பத்திரிகைகள் எல்லாம் 
இவரைப்பற்றி 
எழுதிக்கொண்டே இருக்கின்றன.

யார் இவர்? 

வீடு கட்டுபவர்கள்
நல்ல நாளில் வேலைகளைத் துவங்குவர். 
வீட்டின் அறைகளைவாஸ்து சாஸ்திரப்படி அமைப்பர். 
வீட்டுக்கு வெளியேதிருஷ்டி பூசணிக்காயை போட்டு உடைப்பர்.
இவரும் வீடு கட்டினார்.
எவ்வித சாஸ்திரசம்பிரதாயங்களுக்கும் இடம் கொடுக்காமல்
வாஸ்து பற்றி கவலைப்படாமல்வீட்டைக் கட்டினார். 
திருஷ்டி பூசணிக்காய் கிடையாது
புதுமனை புகுவிழா கிடையாது.
எளிமையாக வாழ்ந்து காட்டியவர். 
எளிமையான முறையில் திருமணம் செய்தவர்
தன் இரு வாரிசுகளுக்கும்மிக எளிமையாக
எவ்விதச் சடங்குகளும் இல்லாமல் திருமணம் நடத்தியவர்.