சாகித்திய அகாதெமியின் “புதிய தமிழ் இலக்கிய வரலாறு” -


சாகித்திய அகாதெமியால் மூன்று தொகுதிகளாக வெளியிடப்படும் புதிய தமிழ் இலக்கிய வரலாறு இதுவரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து இலக்கிய வரலாற்று நூல்களினின்றும் வேறுபட்டது. பண்டைக்காலம், இடைக்காலம், இக்காலம் என மூன்று காலங்களுக்கும் தனித்தனித் தொகுதிகள் கொண்டது.

கற்றுத்தருவதில் வீடுபாதி,சமூகம் மீதி -தினமணிச் செய்தி

இளையோர் விழாவில் நா.முத்துநிலவன் பேச்சு!
மேடையில் விழாத்தலைவர் ராஜ்குமார், நேருயுவக்கேந்திரா சதாசிவம், 
பாவலர் பொன்.கருப்பையா உள்ளிட்டோர் உள்ளனர். 
கவிஞர்நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றுகிறார்.
புதுக்கோட்டை-பிப்23.
   தாய்தந்தை ஆசிரியர் ஆகியோர் கற்றுத்தருவது பாதியென்றால், மீதியைக் கற்றுத்தருவது இந்தச்சமூகம்தான் என்றார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கவிஞர் நா.முத்துநிலவன்.
      புதுக்கோட்டையில் நடந்த இந்திய அரசின் இளைஞர்நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் நேரு யுவக்கேந்திராவின் மாவட்ட இளையோர் ஆண்டுவிழாக் கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய அவர் மேலும் பேசியதாவது

சின்னக்குத்தூசி நினைவு - கட்டுரைப் போட்டி



மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகின்றது.
2013-ஜனவரி-1முதல் டிசம்பர்-31வரை நாளிதழ்கள், பருவ இதழ்கள், இணைய தளங்களில் வெளியான அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு தொடர்பான கட்டுரைகளுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
கட்டுரையை எழுதியவர் மட்டுமின்றி, கட்டுரைகளைப் படித்தவர்களும் அவற்றைப் பரிந்துரைத்து அனுப்பி வைக்கலாம்.
தேர்வு செய்யப்படும் மூன்று கட்டுரைகளின் ஆசிரியர்களுக்குத் தலா பத்தாயிரம் ரூபாய் பரிசளிக்கப்படும்.
2014 ஜூன்-15அன்று சென்னையில் நடைபெறும் சின்னக்குத்தூசி பிறந்தநாள்விழாவில் கட்டுரைகளை எழுதிய ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
2014-மார்ச்-07ஆம் தேதிக்குள்...   
கட்டுரைகளை அனுப்பவேண்டிய முகவரி –
சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை,
13, வல்லப அக்ரகாரம் தெரு,
அறைஎண்-06, திருவல்லிக்கேணி,
சென்னை-600 005
மின்னஞ்சல் – chinnakuthoositrust@gmail.com
 ------------------------------------------------------------------  

புதுக்கோட்டைக்குப் புகழ்சேர்த்த வானம்பாடிக் கவிஞர் பாலா

                           

  பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
                                 நா.முத்து நிலவன்


பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார்.
தமிழகஅரசின் சிறந்த கவிதைநூலுக்கான விருது, சிற்பியின் கவிதைவிருது, உட்பட பலப்பல விருதுகளைப் பெற்றவர் கவிஞர் பாலா. ‘சர்ரியலிசம்’(1977), ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’(1981), ‘பாரதியும்-கீட்சும’;(1982), ‘கவிதைப்பக்கம்’(1986), ‘தமிழ்இலக்கியவிமர்சகர்கள’;(1992), ‘முன்னுரையும் பின்னுரையும்(1995), ‘திண்ணையும் வரவேற்பறைகளும்’(1999), ‘இன்னொரு மனிதர்கள்’(2002), ‘நினைவில் தப்பிய முகம்’(2007), முதலான கவிதை மற்றும் விமர்சன நூல்களுடன், மீரா, மேத்தா, சிற்பி ஆகியோரின் தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வெளியிட்டிருக்கிறார்.

தினமணி -சென்னைப் பதிப்பில் வெளிவந்த எனது கட்டுரை

           கோடை விடுமுறை தேவையில்லையா?!
-நா.முத்து நிலவன்-

ங்கிலேயர் ஆரம்பித்ததுதான், ஆனாலும் நமது பள்ளிகளுக்கான கோடை விடுமுறைஎன்பது நமது மண்சார்ந்த வகையில் -பள்ளிமாணவர் உளவியலும் உடல்நிலையும் சார்ந்த வகையில்- சரியானது தானே? அப்புறம் ஏன் தமிழகத்தின் ஆயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில்    -அடுத்த ஆண்டு அரசுத்தேர்வை எழுத விருக்கும்- இந்த ஆண்டு 9, 11-ஆம் வகுப்பில் படிக்கும் நம் பிள்ளைகளுக்கு  கோடை விடுமுறை மறுக்கப்படுகிறது

வலைப்பக்க வயது நான்கு தொடக்கம் – வலைப்பதிவு வரிசை பத்து

 வலைப்பதிவு தொடங்கி மூன்றாண்டு முடிந்து,
நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த பிப்ரவரி-18  தரும் சிந்தனை

மூன்றாண்டுகளில் தரமான(?) எனது முதல்10 பதிவுகள் என நான் நினைப்பவை இவை  
(ஆனால் வாசகர் வரிசை வேறாக இருக்கிறதே! ஏன்?)
இதோ என் வரிசை-

பாடமாய் மாறிய படங்கள் – பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி


பாலுமகேந்திரா (20-05-1939 -- 13-02-2014)
பாலநாதன் பெஞ்சமின் மகேந்திரன் என்ற பாலுமகேந்திரா காலமானது அறிந்து ஒரு பெரும் ஒளிஓவியரை இழந்த வலியின் எச்சங்கள் -
பல தேசிய விருதுகளையும் தாண்டிய அவரது ஒளிப்பதிவும் இயக்கிய திரைப்படங்களும் அவரது பெயரைத் திரைத்துறையின் பாடத்திட்டத்தில் இன்னும் பல்லாண்டுக்காலம் இருக்க வைக்கும் என்பது  உறுதி.

வறுமையும் வளமையும் பரம்பரைச் சொத்து - இசைப்பாடல்


பண்டைப் புகழும் பாரம்பரியப்
     பண்புகள் மிக்கதும் இந்நாடே அற்பச்
சண்டையில் எங்கள் அண்டை வீட்டவர்
    மண்டை உடைவதும் இந்நாடே!           (1

எல்லா வகையிலும் வல்லோர் எங்களை
    ஏளனம் செய்வதும் இந்நாடே! வெறும்
செல்லாக் காசென மனிதப் பண்புகள்
    சிரிப்பாய்ச் சிரிப்பதும் இந்நாடே!            (2

வற்றா நதிகளும் வண்டல் பூமியும்
   வளம் கொழிப்பதும் இந்நாடே! தினம்
பற்றாக் குறைகளும் பட்டினிச் சாவும்
   பரம்பரை யாவதும் இந்நாடே!                (3

எழுதுகோல் தெய்வம்! எழுத்தும் தெய்வம்!

தினமணி தலையங்கப்பக்கத்தில் வெளிவந்த எனது கட்டுரை
--நா.முத்துநிலவன்--
   எழுதுபவர்கள் மூன்று வகையினர் முதல் வகையினர் மிகப் பெரும்பான்மையோர்-கணக்கெழுதுபவர் அல்லது கடிதம் எழுதுபவர். இவர்களது எழுத்தால் சமுதாயம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படுவதி;லை.

கவிதைகளில் “கெட்டவார்த்தை“ வரலாமா?

கவிஞர் ஜெயபாஸ்கரன், சென்னை

சென்னையில் நடந்த கவிஞர் ஜெயபாஸ்கரன் கவிதைகள் முதல் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் சுவையான விவாதம் ஒன்று நடந்தது.

எல்லாச் சாமியும் ஒண்ணு தான்! - கவிதை

ஒன்னை ஒன்னு இழுத்துக்கிட்டு
                 
உருண்டக் கிரகம் போகுது - இதை
உணராத மனுசக் கூட்டம்
                   
உருண்டு பெரண்டு சாகுது!

ரம்சான் பண்டிகை பிரியாணி
                 
ரத்தினம் வீடு போகுது! அந்த
ராமு வீட்டுப் பொங்கச் சோறு
                   
ராவுத்தர் வீடு போகுது! ----(ஒன்னை…)

சாகுலோட சங்கரனும்
                 
ஜானும் போறான் பாருங்க ஆகா
சாகும் வரைக்கும் இப்படியே,
                 
சார்ந்திருந்தா போறும்ங்க!

கையக் கோத்து திரியிது பார்
                 
கள்ளமில்லாப் பிள்ளைக பின்ன
பையப் பைய பிரிச்சு வச்ச
                 
பாவிக யார் சொல்லுங்க?  ---(ஒன்னை…)

நாகூர் ஆண்டவர் மண்டபத்துல
                 
நல்லக்கண்ணு கிடக்குது சீக்கு
போகணுமின்னு வேண்டி அந்த
                 
வேண்டுதலும் நடக்குது!

அம்மைப் பாத்த கொடுமை போக
                 
அபுலுகலாம் பொஞ்சாதி மாரி
அம்மனுக்கு நேந்துக் கிட்டு
                 
உப்புக்கடன் செஞ்சாக!   -----(ஒன்னை…)

இருக்கும் நொம்பலம் தாங்கலய்யா
                 
எந்தச் சாமி தீர்த்தது? – அட
எது வாச்சும் செய்யட்டுமேனு
                 
ல்லாத்தையும் பார்த்தது!

ஏழ பாழ சனங்களுக்கு
               
எல்லாச்சாமியும் ஒன்னுதான் - இதுல
ஏற்றத் தாழ்வ சொல்லிக் கெடுத்தது
               
ஏவன்டா? அவன் மண்ணுதான்.!-(ஒன்னை…)  

எனது கவிதைத் தொகுப்பு -
புதிய மரபுகள்” -- சிவகங்கை கவிஞர் மீராவின் அன்னம் வெளியீடு-1993

(1995முதல் இன்று வரை, மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்ஏ–தமிழ் பாடநூலாக இருக்கும் எனது கவிதைத் தொகுப்பிலிருந்து)

இப்படி இருக்கணும் திருமண அழைப்பு!


நாளிதழ்  “மேட்ரிமோனியல்”களில் இன்ன மதம்-சாதி, 
குலம்-கோத்திரம் எல்லாம் சொல்லி அதில்தான் 
மணமகன் (அ) மணமகள் வேண்டும் என்று வரும் விளம்பரங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு 
எரிச்சலும் கோவமுமாய் வரும்.... 
இப்படி ஒரு கேவலமான சமூகத்தில் 
நாமும் வாழ்கிறோமே என்று!

ஆனால், இதோ 
நம் நண்பர் 
திருச்சிப் பத்திரிகையாளர் வில்வம் விடுத்திருக்கும் 
அழைப்பு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கிறது. 

சாதிமதங்களைப் பாரோம் - உயர்
                           சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி
                     வேறுகுலத்தினராயினும் ஒன்றே 
- என்ற பாரதி வாக்கிற்கேற்ப-

மணஇணையராக 
மனிதரை மட்டுமே 
தேடும் நிகழ்வு!

நீங்களும் பாருங்கள்,
உங்கள் நண்பர்கள், உற்றார்-உறவினர்க்கும்
தவறாமல் சொல்லுங்கள்!

பண்பாட்டுக் கருத்தரங்கம்

பங்கேற்க வருக...
வெளியூரில் இருப்போர்க்குத் தகவலுக்காக,
உள்ளுர் நண்பர்களுக்கு அன்பான அழைப்பு.
(தற்போது அமெரிக்காவில் இருந்து, திண்டுக்கல் நிகழ்ச்சியை எனக்கு மின்னஞ்சல் செய்த தோழர் இரா.சு.மணி (எ) சுப்பிரமணியன் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது நன்றி)

"கீற்று" இணைய இதழைக் காப்பாற்றுவோம்

தமிழ் இணைய இதழ்களில் புகழ்பெற்றது கீற்று இணையம். லாபநோக்கின்றி நண்பர்கள் சிலர்தம் உடல்உழைப்பால் நடத்தப்படும் கீற்று இதழில், அச்சில் வரும் ஏராளமான சிற்றிதழ்களின் இணைப்புகளும் தரப்படுகின்றன.  சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகவும் அடித்தளம் அமைத்துத் தருவது கீற்று இணைய இதழாகும்.

சூப்பர் சிங்கர் திவாகர்தான்!

சூப்பர் சிங்கர் இறுதிப்போட்டியில் பாடிய அற்புதப் பாடக இளைஞர்கள்
இடமிருந்து சையது, பார்வதி, நடுவில் திவாகர், சோனியா, சரத்












விஜய் தொலைக்காட்சியில் நான் மிகவும் ரசித்துப் பார்ப்பது  கோபிநாத்தின் நீயா நானா நிகழ்ச்சியை அடுத்து, சூப்பர் சிங்கர் தான். (நமக்குப் பாடவருதோ இல்லையோ நல்லாப் பாடுறவங்க நல்லாவே பாடும்போது ரசிப்போம்ல?)

எங்கள் கிராமத்து ஞான பீடம்!



பள்ளிக்குழந்தைகளின் பரிதவிப்பு!

‘நேர்நில்’ சொல்லியும்
நிமிர்ந்து பறக்க
சக்தியற்று –
தர்மசக்கரத்தை மறைத்து
தேசியக்கொடி
தரைபார்க்க,
மாணவர் ஊர்வலம்
மரத்தடிக்குச் செல்லும்.

வலைப்பதிவர்களே! கவனம்... யாகூ மின்னஞ்சலைக் காணவில்லையாம்!

என்னத்தச் சொல்றது? கவலை தரும் செய்தி...

ஒரு முறை நம் நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை முடிந்து, அந்தக் கோப்பு முழுவதும் காணாமல்.. “காணாமல் போனது பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்பு காணோம்” என்று நாறிப்போனது நினைவிருக்கா?

இப்ப அப்படித்தான்...
பெரும்பாலான யாகூ மின்னஞ்சல் முகவரிகளைக் காணவில்லையாம்... கடவுச்சொல்லும் திருடப்பட்டுள்ளதாம்!
உங்கள் யாகூ கிடைக்கிறதா பார்த்துக்கொள்ளுங்கள்...
உங்கள் பெயரில் நண்பர்களுக்கு ஏதும் மின்னஞ்சல் சென்றுள்ளதா என்று முடிந்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் 

இன்னும் என்னென்னவற்றையெல்லாம் நாம் காணவில்லை என்ற பட்டியலில் சேர்த்து காணாமல் போடப்போகிறோமோ தெரியல...

அதுசரி... இந்த கூகுள் எப்ப காணாமல் போகுமோ என்று யோசித்தால்...? நம் வலைப்பதிவர்கள் நிலை என்ன ஆகும்?

இதற்கு மாற்றுவழி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்? 

செய்தி இணைப்பிற்கு -
தீக்கதிர் மின்னிதழ் - 01-02-2014 பக்கம்-06.