வலைப்பதிவர்களே! கவனம்... யாகூ மின்னஞ்சலைக் காணவில்லையாம்!

என்னத்தச் சொல்றது? கவலை தரும் செய்தி...

ஒரு முறை நம் நாடாளுமன்றத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான விசாரணை முடிந்து, அந்தக் கோப்பு முழுவதும் காணாமல்.. “காணாமல் போனது பற்றிய விவரங்கள் அடங்கிய கோப்பு காணோம்” என்று நாறிப்போனது நினைவிருக்கா?

இப்ப அப்படித்தான்...
பெரும்பாலான யாகூ மின்னஞ்சல் முகவரிகளைக் காணவில்லையாம்... கடவுச்சொல்லும் திருடப்பட்டுள்ளதாம்!
உங்கள் யாகூ கிடைக்கிறதா பார்த்துக்கொள்ளுங்கள்...
உங்கள் பெயரில் நண்பர்களுக்கு ஏதும் மின்னஞ்சல் சென்றுள்ளதா என்று முடிந்தவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் 

இன்னும் என்னென்னவற்றையெல்லாம் நாம் காணவில்லை என்ற பட்டியலில் சேர்த்து காணாமல் போடப்போகிறோமோ தெரியல...

அதுசரி... இந்த கூகுள் எப்ப காணாமல் போகுமோ என்று யோசித்தால்...? நம் வலைப்பதிவர்கள் நிலை என்ன ஆகும்?

இதற்கு மாற்றுவழி தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்? 

செய்தி இணைப்பிற்கு -
தீக்கதிர் மின்னிதழ் - 01-02-2014 பக்கம்-06.


கலிபோர்னியா, ஜன.31-
இணையதள பெரும் நிறுவனங்களில் ஒன்றான யாகூ, சமீபத்தில் தனது மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுப் பெயர்கள் மற்றும் பாஸ்வேர்டுகளை, பெயர் தெரியாத நிறுவனம் ஒன்று இணையதளவழியாக உள்ளே புகுந்து திருடிச் சென்றுவிட்டதாக கூறியுள்ளது. 

இதனால் உலகம் முழுவதும் யாகூ மின்னஞ்சலை பயன்படுத்தி வரும் பலரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் எத்தனைபேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறித்து கண்டறிய முடியவில்லை என்றும் யாகூ தெரிவித்துள்ளது.

கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இணையதள கார்ப்பரேட் நிறுவனமான யாகூ, திருடப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

யாகூ, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்களை அப்படியே அமெரிக்க நாசகர உளவு ஸ்தாபனங்களுக்கு அளித்துக்கொண்டிருக்கும் நிலையில், யாகூ நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


http://epaper.theekkathir.org/ - dated 01-02-2014 

“யாரை எங்கே வைப்பது என்றே 
        யாருக்கும் தெரியலே -அட
 அண்டங்காக்காய்க்கும் குயில்களுக்கும் 
         பேதம் புரியலே பேதம் புரியலே!” - கண்ணதாசன்.

அட போங்கப்பா...!

10 கருத்துகள்:

  1. இல்லை ஐயா... இப்போது கூட வருகிறதே... இன்னும் சிறிது நேரம் ஆகுமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது கிடைக்கிறது என்றால் மகிழ்ச்சி...
      இனி எப்போதும் கிடைக்குமா என்று தெரியவில்லை என்பது நிலை.
      யார்யாருடைய மின்னஞ்சல் கடவுச்சொல்லுடன் திருடப்பட்டது என்று இன்னும் கணக்கே தெரியவில்லையாமே?

      நல்ல வேளை நான் முன்னர் வைத்திருந்த யாகூ கணக்கில் ஏராளமான விளம்பர அஞ்சல்கள் வந்து பெட்டியைத் தினமும் ரொப்பிக்கொண்டு உட்கார்ந்ததால் நான் வெளியேறிவிட்டேன்..
      கூகுள் என்ன நம் மச்சானா? அதுவம் எத்தனை நாளைக்கோ? இவற்றுக்கு மாற்றுவழி என்ன என்பதுதான் இப்போது கேள்வி

      நீக்கு
    2. மாற்று வழி : தனியாக தளத்தை தனி domain (.com/.net/.info) ஆக மாற்றி விட வேண்டும்... அதற்கு முன் இதுவரை எழுதியவைகளை என்ன செய்வது :

      ஒவ்வொரு பதிவை வெளியிட்ட பின் அல்லது வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டியது :

      Settings ---> Other ---> Export Blog

      இவ்வாறு செய்தால், அந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளும் சேமிப்பு ஆகும்... Blogger மூடு விழா ஆகி விட்டால் (அப்படி ஆகாது என்று நினைக்கிறேன்) உருவாக்கிய புதிய domain தளத்தில் மீண்டும் Settings ---> Other ---> Import Blog எல்லா பதிவுகளும் வந்து விடும்...!

      நீக்கு
    3. நன்றி அய்யா. மிக்க நன்றி. மேலும் ஒரு சிறு சந்தேகம்..
      நமது வலைப்பக்கத்தின் பின்பற்றாளராகச் சேர்ந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க ஏதும் வழியுண்டா? குறிப்பாக வலைப்பக்கம் இல்லாதவர்க்கு..? கடைசியாகச் சேர்ந்தவர் யார் என்றும் கண்டுபிடிக்க ஏதும் வழியுண்டா? தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே! முன்கூட்டியே நன்றி.

      நீக்கு
  2. நல்ல வேளை! நான் கூகுள் அடிமை

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா.

    தங்களின் தகவலை கேட்டவுடன் .... கவலையாகத்தான் உள்ளது... நானும் பயன் படுத்துவது.yahooதான்..... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    புதிய கவிதையாக.. என்பக்கம்-கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்…….அன்போடு
    வாருங்கள் வாருங்கள் ..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. யாஹூ மற்றும் கூகிள் இரண்டிலும் எனக்கு கணக்கு உண்டு.. யாஹூ – எச்சரிக்கைத் தகவலைப் பகிர்ந்து கொண்ட ஆசிரியருக்கு நன்றி! இனிமேல்தான் சென்று பார்க்க வேண்டும். கூகிள் - ஒருநாள் திடீரென்று இலவசம் இல்லையென்று சொல்லப் போகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. முழுவதும் பாதுகாத்துவிடும் என்று சொல்லமுடியாவிட்டாலும், இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு..குறிப்பிட்ட கால இடைவெளியில் கடவுச்சொல்லை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். கடவுச்சொல்லில் பெரிய மற்றும் சிறிய எழுத்துகள், எண்கள் கலந்து இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. அப்படியா? ம்... நடப்பது நடக்கட்டும்ம்ம்ம்...

    பதிலளிநீக்கு