உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன சொல்கிறது?!

“அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்று இன்றைய உச்சநீதி மன்றம் தீர்ப்புச் சொல்லிவிட்டதாகச் செய்திகள் வருகின்றன. ஆகம விதிகளின்படியே அர்ச்சகர் நியமனம் இருக்க முடியுமாம்! ஆகமவிதிகள் என்றைக்கு சாதியில் சமத்துவம் பேசின?
சாதி-வேறுபாடுகளை, உயர்சாதி ஆதிக்கத்தை உறுதிப் படுத்தத்தானே ஆகம விதிகளே எழுதப்பட்டன?

இது எதிர்பார்த்தது தான்.
மனுவின் ஆழ-அகலம் அப்படி!

இது தொடர்பாக இன்னும் தெளிவான பதிவொன்றை அய்யா சுப.வீ.அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனை நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டுகிறேன் -
http://subavee-blog.blogspot.in/2015/12/blog-post_19.html
நன்றி. -நா.மு. 19-12-2015
----------------------------------------

சரி, தீர்ப்பு சொல்லாமல்(?) சொல்வதென்ன?
ஆகம விதிப்படி அர்ச்சகராகலாம்...
அதையும் கூட 
வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம்,
இன்றுள்ள நடைமுறைப் படியே
உயர்சாதியினரே அர்ச்சகராகட்டும்,

ஆனால்,
ஒரு பெண்,
இவர்களே சொல்வதைப் போல
உயர்சாதிப் பெண், அர்ச்சகராவதை 
நீதிமன்றம் ஏற்குமா?

இந்துமதத்தில், வழிபடுவோரில் பெரும்பான்மையோர் பெண்கள்தான், வழிபாடு மட்டுமல்ல, வழிபாட்டுக்குரிய சடங்குகளை ஏற்பாடுகளைத் தொடர்வோரும் பெண்கள்தான், 
பண்பாடு எனும் பெயரில் 
பெண்பாடு பெரும்பாடு!
இவ்வளவு ஏன்? 
வழிபடப்படும் தெய்வத்தில் 
பெண்தெய்வங்களே 
இன்றும் அதிகம்! 

(எத்தனை காளியம்மாவை ஒரு பாடலில் அடுக்கினார்கள்... அவ்வளவும் கொடுமைக்குள்ளாகி இறந்துபோன அந்தந்தப் பகுதிப் பெண்களின் வரலாறுதான் என்கிறது சமூகவியல் ஆய்வு!) 

இவ்வளவு இருந்தும் பெண் அர்ச்சகராக முடியாது என்று அரசியல் சட்டமே சொல்லியிருக்கிறதா? 
யாராவது வழக்குப்போட்டால்தான் தெரியும் 
உச்ச நீதி மன்றத்தின் 
மிச்ச நீதி!

ஆண்களின்,
அதாவது-
மேல்சாதி ஆண்களின்
ஆதிக்கத்தை
நிலைநாட்டவே
இன்றைய சட்டமும், நீதியும்
அனைததுச் சமூக ஏற்பாடுகளும்!

அம்பேத்கார் இருந்திருந்தால் 
சட்டமறுப்புப் போராட்டம் உறுதி!
  
இந்து மதத்தில் மட்டுமல்ல... எந்த மதத்திலும்
பெண் தலைமையை ஆண் ஏற்பதில்லை!
எம்மதமும் இதில் சம்மதம்!

இதுபற்றிப் பெண்கள்தான் யோசிக்க வேண்டும்!

கிறிஸ்துவப் போப்பாண்டவராக
இதுவரை ஒரு பெண் வந்ததில்லையே?

“இத்தனை ஆயிரம் நபிகளில்
ஒரு பெண் நபி கூட இல்லையே?
ஏன் வாப்பா?என்று
கவிஞர் எச்.ஜி.ரசூலின் மகள் கேட்ட கேள்விக்கு
உலகின் எந்த மூலையிலிருந்தும்
இதுவரை பதிலில்லையே? ஏன்?

நான் சமீப காலமாகப் 
பேசிவரும் தலைப்பு -
“சாதிகள் 
இருக்குதடி பாப்பா!”


இது சாதியாகப்
பிரிந்துகிடக்கும் இந்தியா என்பது
இந்தத் தீர்ப்பின் பிறகாவது  
எல்லாருக்கும் புரிகிறதா?

இது ஆணாதிக்க உலகம் என்பது
இப்போதாவது புரிகிறதா?

புரிந்தவர் செயல்படுங்கள்.
புரியாதவர் 
இனிமேலாவது
யோசியுங்கள்.
--------------------------------- 
இது தொடர்பாக இன்னும் தெளிவான பதிவொன்றை அய்யா சுப.வீ.அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதனை நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டுகிறேன் -
http://subavee-blog.blogspot.in/2015/12/blog-post_19.html
நன்றி. -நா.மு. 19-12-2015
----------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக