உலகை மாற்றிய விஞ்ஞானி, குரங்குமனிதனா?

 


சிறுவனாக இருந்தபோது, பெரும்பாலும்  பள்ளிக்குச் செல்லாமல், ஊர் சுற்றுவார். கட்டிலுக்கு அடியில் பல எலிக்குஞ்சுகளை வளர்த்தார்தட்டான்மண்புழுக்கள், பட்டாம்பூச்சி, வண்டு, அணில், புறா என விலங்குகளுடன் தன் பொழுதைக் கழிப்பார். விலங்குகளிடம் அன்பாக இருப்பார்

இதனால் தந்தைக்கு  மகன் மேல் ஏகக் கோபம்.  “உனக்குப் படிக்கவே பிடிக்கலை; படிப்பும் ஏறல; நாய் பின்னாடி ஓடுறது; எலி பிடிக்கிறது இதுதான் உனக்குபிடிச்சது. உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். இதனால் குடும்ப மானமே போகுது!” எனத் தன் மகனை கடித்து கொள்வார் தந்தை
  அந்தத் தந்தைக்கு, பின்னாளில் தன் மகன் பெரிய விஞ்ஞானியாகப் போகிறான்.. உலக சரித்திரத்தில் நீங்கா இடம் பெறப்போகிறான் என்பது தெரியவில்லை.

காலங்களில் அவன் வசந்தம் (கண்ணதாசன் பிறந்தநாள் கட்டுரை)


கண்ணதாசன் 24-06-1927இல் பிறந்தார், இவரது பாடல்களுக்குப் பொருத்தமான இசையை வழங்கிய மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள், சரியாக ஓராண்டுக் கழிந்து, 24-06-1928இல் பிறந்தார். பாடல் பிறந்தபின் இசைபிறந்தது! இருவருக்கும் நம் இதய நன்றியை இசைவரிகளால் அர்ப்பணிப்போம். 
ஆனாலும் இது கண்ணதாசனனைப் பற்றி மட்டுமே எழுதப்பட்ட கட்டுரை. எம்.எஸ்.வியின் இசைபற்றி எழுத எனக்கு ஞானம் போதாது. என்றாலும், பொருத்தமான இன்னொரு சூழலில் அவர்பற்றியும் எழுதுவேன் என்னும் உறுதியோடு, இப்போது கண்ணதாசனை வாசிக்க அழைக்கிறேன்.
-----------------------------------------------------------------------
 புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் “திருமகள்“ பத்திரிகையில் சேர்ந்தபோது, அவனுக்கு வயது பதினேழு!
  அங்கு அவனது பெயரைக் கேட்டபோது, சட்டென்று தோன்றிய ஒரு கற்பனையான புனைபெயரைச் சொல்லி வைத்தான். 
  பின்னாளில் தமிழ்த்திரைப்படப் பாடல்உலகில் முப்பதாண்டுக் காலம் முதலிடத்தில் இருக்கப் போவது “கண்ணதாசன்”எனும் அந்தப் பெயர்தான் என்பது முத்தையாவுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனெனில் அது நடந்தது 1944ஆம் ஆண்டில்!

விபச்சார விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்!

'ஆட்டைக் கடிச்சு மாட்டைக்கடிச்சு..' என்கிற கதையாக, கடைசியில் சீட்டு விளையாட அழைக்கும் விளம்பரமும் தொலைக்காட்சியில் வந்துவிட்டது! (படத்தைப் பாருங்கள்!) அடுத்து விபச்சார விளம்பரம் வருவதை விரைவில் எதிர்பார்க்கலாம்..இருபாலருக்கும்தான்!

கணினி நேரலையில் கொட்டிக்கிடக்கும் ஆபாசத் தளங்களையும், சீட்டுவிளையாட அழைக்கும் விளம்பரங்களையும் தாண்டி நல்லவற்றை மட்டுமே தொடரக் கற்றுக்கொண்டால் இன்றைய இளைய தலைமுறையின் வெற்றி நிச்சயம்தான். தாண்டணுமே?

ஏற்கெனவே “மாக்டொவெல்“குழுமத்தின் சோடா(?) விளம்பரம் பெரியநடிகரின் பெயரில் வந்தது, சர்ச்சையாகி ஓய்ந்தது தெரியும். அந்த விளம்பரமும் அவ்வப்போது வரத்தான் செய்கிறது. அந்த விளம்பரம் சோடா விளம்பரமே இல்லை, மறைமுகமாக அந்தக் குழுமத்தின் விஸ்கி பிராந்தி விளம்பரமே என்பதை அறிந்தவர்கள் அறிந்திருந்தார்கள்… அரசுகள்தான் பாவம் அறியவே இல்லை!

அடுத்த கட்டமாக, நம் வீட்டுக் கூடத்துக்கே வந்துவிட்டது சீட்டாட அழைக்கும் தொலைக்காட்சி விளம்பரம்! (படத்தைப் பாருங்க!)

பாலிமர் தொலைக்காட்சியில் இன்று காலை ஒளிபரப்பான செய்தியின் ஊடாக வந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அரண்டு புரண்டு, செல்பேசியைத் தேடிஎடுத்துப் படம்பிடிப்பதற்குள் இந்தக் காட்சியை மட்டுமே பிடிக்க முடிந்தது! நண்பர்கள் மன்னிக்க வேண்டும்!

குடி ஆச்சா..? இப்ப சீட்டு…! இனி விபச்சாரம் ஒன்றுதான் பாக்கி அதற்கும் மறைமுகமாகவோ ஏன் நேரடியாகவோ தொலைக்காட்சி விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்கள்…!

“பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்”-பாரதி.

'இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு - குறள் 920
      (பொருள்- விலைமாந்தரும், குடிகாரர்களும், சூதாடுவோரும்    
       தீயதொடர்புடையாராகி அழிவர்)
பி.கு. - இதைப் படித்துவிட்டு 'விஸ்கி விஸ்கி' அழுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... எல்லாம் மனப்'பிராந்தி'தான் என்று அடுத்தவேலையைப் பார்க்கப் போகலாம்.. நடப்பதெல்லாம் நம்செயலல்லவே? நாராயணன் செயல்தானே? சுப மஸ்தூ!

‘நீங்களும் வெல்லலாம் ஒருகோடி” – விஜய் டிவியின் அபத்தப் போட்டி!

பொதுஅறிவுப் போட்டி ‘போல’ இருக்கே?ன்னு அவ்வப்போது பார்த்தேன்!

நாகை-காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காளியம்மாள் எனும் மீனவர்பகுதிப் பெண், தன் கணவரோடு வந்து அசத்தினார். அசராமல் நல்லவிதம் பதிலளித்தார்.
அதோடு, “மீனவ மக்களின் வாழ்க்கைக் கொடுமையை மற்றவர் அறியச் செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும்“ எனும் தமது கோரிக்கையையும் வெளிப்படுத்தியபோது அவர்மீது மரியாதை எழுந்தது. 

அவரது கணவர் “அப்பப்ப சிங்களப் போலிஸ் பிடிச்சுக்கிட்டு போய்டுவாங்க சார்! திரும்பி வந்தாத்தான் உண்டு!” என்று பரிதாபமாகச் சொன்னதும், நெஞ்சில் அறை விழுந்தது! இவர்தான் அதிகபட்சமாக 25லட்சம் வென்றார் என்பது மகிழ்வளித்தது!

பரவாயில்லையே இந்தப் போட்டி இப்படிக்கூட உதவுகிறதே என்று நேரம் கிடைக்கும்போது நானும் பார்க்கத் தொடங்கினேன்… ஆனா… இப்ப..?

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு...



அன்பினிய
கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு 
வணக்கம்.

“ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க” 
எனும் அற்புதவரிகளைக் கொண்ட தங்களின் பாடலை, 
இன்றொரு நண்பர் 
காண்செவிக்குழுவில் 
அனுப்பியிருந்ததைக் கண்டேன்.

ஆனால், காட்சி முழுவதும் சிவன்கோவில்களின் பின்னணியில் பற்றிப் படர்ந்து வருவதாக அமைந்திருந்தது..

அற்புத வரிகள்...
சுதா ரகுநாதன்(?)அவர்களின் இனியகுரலில்... 
ஆனாலும்....
மதம் கடந்து நின்றிருக்கவேண்டிய வரிகள் 
மனம்கடந்து சென்றவிதம் வருத்தம் தருவதாய் இருந்தது...

இதனை, மதச்சார்பற்ற கொள்கைகளைக் கொண்ட கவிஞர் வைரமுத்து விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்.

எனவே தான், இதனை உங்கள் பார்வைக்கு அனுப்புகிறேன்...

தங்கள் பணிகள் தொடர்க. 
நன்றி வணக்கம். 
அன்புடன்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

காணொளி இணைப்பு -
நன்றி - யூட்யூப் 
(கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்)

பாடல் வரிகள் -

நிம்மதி சூழ்க!

ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க 
சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க
நீரில் மிதந்திடும் கண்களும் காய்க
நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க!

ஜனனமும் பூமியில் புதியது இல்லை 
மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை 
இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை

பாசம் உலாவிய கண்களும் எங்கே? 
பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே?
தேசம் அளாவிய கால்களும் எங்கே?
தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே 

கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக
மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க
எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக
எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க

பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை.

கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை
தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை
நதி மழை போன்றதே விதியென்று கண்டும்
மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன!

மரணத்தினால் சில கோபங்கள் தீரும்
மரணத்தினால் சில சாபங்கள் தீரும்
வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் 
விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும்

பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம்
யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம்
நித்திரை போவது நியதி என்றாலும்
யாத்திரை என்பது தொடர்கதையாகும்

தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும்

மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க!
தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க!
பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க!
போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க!

கவிஞர் வைரமுத்து.

தோற்றவர்களைப் பற்றி, யார் கவலைப்படுகிறார்கள்?

இன்றைய நம் உலகமே, வெற்றிபெற்றவர்களின் பின்னால் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்கள் எத்தகைய கேவலமான பின்னணியில் அந்த வெற்றியைப் பெற்றிருந்தாலும்!

ஆனால், தோல்விகளில் இருந்துதான் பற்பல சாதனையாளர்கள் வளர்ந்திருக்கிறார்கள் என்பதை நுட்பமான பார்வையுள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும்!

குறிப்பாக நமது கல்விமுறை, தோல்வியாளர்களை உற்பத்தி செய்வதற்காகவே -அல்லது எப்படியாவது, என்ன அயோக்கியத் தனம் செய்தும் வெற்றிபெற வேண்டும் என்பதைக் கற்பிப்பதற்காகவே- பள்ளிகளை உற்பத்தி செய்கிறது!

இதிலும் குறிப்பாக, நம் கல்விமுறையில் தோற்றுப் போனவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்கள், ஆசிரியர்களைப் பழிவாங்கவே பயன்படுகின்றன.

எனவே வெற்றியில் மகிழ்வதும், தோல்வியில் துவள்வதுமே மாணவ உலகிற்கு அவர்கள்  தரும் கொடை!

வெற்றிபெற்றவர், தோல்வியடைந்தவர் இருவரைப்பற்றியும் கவலைப்பட யாராவது இருக்கிறார்கள்! ஆனால், பள்ளியில் படித்தும் தேர்வே எழுதாமல் காணாமல் போனவர்களைப் பற்றி, இதுவரை யாரும் கவலைப் பட்டதில்லை!
புதுக்கோட்டை பதிவர்  திருவிழாவில்
ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு  நினைவுப் பரிசு வழங்குகிறார் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள்.
பின்னால்...திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் பா.மதிவாணன் அவர்கள்
------------------------------------------------------ 
 நுட்பமான தமிழறிஞரும்,
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்க நிறுவுநரும்,   
கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருமான ,
முனைவர் நா.அருள் முருகன் அவர்கள்
தேர்வெழுதாமலே காணாமல் போகும் நம் குழந்தைகளைப் பற்றிய ஓர் ஆய்வைத் தமது வாழ்விலிருந்தே 
வரைந்திருக்கும் ஓவியம் அற்புதமானது!

படியுங்கள், நமது கல்விமுறை மேலும் புதிய வழித்தடத்தில் பயணிக்கட்டும்! அவர்கள் வாழ்க!


நன்றிக் கடன் வளர்ந்துகொண்டே போகிறது,,,

நெகிழ வைத்த நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி...
எழுத்தாளர், பதிவர் கரந்தை ஜெயக்குமார்
 பார்க்க -

கோவையில் எனது நூல்கள் அறிமுக விழா...வருக நண்பர்களே!

--------------------------------------------------- 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்
கோவை மாவட்டம் 
இலக்கியச்சந்திப்பு – நிகழ்வு – 170
05.06.2016 - ஞாயிறு காலை 10 மணி 
தாமஸ் கிளப், ரயில் நிலையம் அருகில், கோவை.
------------------------------------------------------ 
தலைமை 
மா.சாமிநாதன்
----------------------------------------- 
நூல்கள் அறிமுகம்
நா.முத்துநிலவனின் கட்டுரைத் தொகுப்புகள்

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே !
உரை – முனைவர் பா.மூர்த்தி
காவல் துணை ஆணையர், கோவை

கம்பன் தமிழும் கணினித் தமிழும்
உரை – புலவர் செந்தலை ந.கவுதமன்

கீதா பிரகாஷின் கவிதை நூல்
ஜனுக்குட்டியின் பூனைக்கண்கள்
உரை – கவிஞர் சுடர்விழி

சிறப்புரை – நவீன இலக்கிய வெளி – ஓர் பார்வை
கவிஞர் அமிர்தம் சூர்யா 
தலைமை உதவி ஆசிரியர் – கல்கி வார இதழ்

ஏற்புரை 
கவிஞர் நா.முத்துநிலவன் 
கவிஞர் கீதா பிரகாஷ்

கவியரங்கம் - விருப்பத்தலைப்பு

அவசியம் வாங்க!
தொடர்புக்கு - மு.ஆனந்தன் - 94430 49987
-----------------------------------------
அவ்வண்ணமே கோரும்,
நா.மு.
------------------------------------

ஆசிரியர்கள் – பள்ளியிலிருக்கும் பெற்றோர்கள், பெற்றோர்கள் – வீட்டிலிருக்கும் ஆசிரியர்கள்!

சென்னை அண்ணாநகர் SBIOA பள்ளி
கல்விக்கருத்தரங்கில் எனது பேச்சு 31-05-2016

--------------------------------
ஆசிரியர்களுக்கான இக்கருத்தரங்கில்,
சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் எர்ணாகுளத்தில் உள்ள இப்பள்ளிகளின் ஆசிரியர்கள் -சுமார் 1200பேர் வந்திருந்தனர்
அதில் எனது பேச்சை அச்சிட்டு அனைவர்க்கும் வழங்க முன்கூட்டியே கேட்டிருந்தபடி இதோ...
(அப்புறம் கொஞ்சம் கூடக்குறையப் பேசினேன்... அவர்கள் கேட்ட கேள்விபதில் பகுதியும் சுவையானதாக அமைந்தது.
அந்த யூட்யூப் இணைப்புக் கிடைத்ததும் அதனை நம் நண்பர்கள் பார்க்கத் தருவேன் - நா.மு.)
"உங்கள் குழந்தைகள், உங்களின் குழந்தைகள் அல்ல
அவர்கள் எதிர்கால வாழ்வின் பிள்ளைகள்!
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்கள்;
ஆனால் அவர்கள் உங்களில் இருந்து வரவில்லை
 அவர்களுக்கு நீங்கள் அன்பைத் தரலாம் -
உங்களின் சிந்தனைகளை அல்ல!
ஏனென்றால் அவர்களுக்கென்று
அழகான சிந்தனைகள் உண்டு
 அவர்களின் சரீரத்தை நீங்கள்                                                                                                      வீட்டுக்குள் வைத்திருக்கலாம் - ஆன்மாவை அல்ல
ஏனென்றால் அவர்களின் ஆன்மா
வருங்காலத்தின் வீடுகளில் வாழ்கிறது;
அந்த வீட்டை நீங்கள் கனவில்கூட
சென்றடைய முடியாது